மூன்றாவது ஒருநாள் CRIKET போட்டி விசாகப்பட்டினத்தில் இந்திய அணி வென்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் ,ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா, இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றன. மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, திலக் வர்மா வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்தியா 'பவுலிங்' தேர்வு செய்தது.
தென் ஆப் ரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 39.5 ஓவரில் 271/1 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வால், தொடர் நாயகனாக கோலி (302 ரன்) தேர்வு செய்யப்பட்டனர்.இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை வென்றது.
0
Leave a Reply